மத்திய அமைச்சரை புகழ்ந்த சரத் பவார்; பாஜகவில் அதிகார போட்டிக்கு இட்டு செல்லுமா?
நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் பிரதிநிதி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு கட்கரி சிறந்த எடுத்துக்காட்டு என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புகழாரம் சூட்டியுள்ளார்.


வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அதிகாரத்தை திறம்பட பயன்படுத்தியதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புகழாரம் சூட்டியுள்ளார். மகாராஷ்டிரா அகமதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியல் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார், பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சரத் பவார், "அகமதுநகரில் பல்வேறு திட்டங்களை கட்கரி தொடங்கி வைக்கவிருப்பதாக முன்னதாக என்னிடம் தெரிவித்ததால்தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். நீண்ட நாள்களாக நகரில் நிலவும் பிரச்னைகளுக்கு இவை தீர்வளிக்கும். நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என கட்கரி விரும்பினார்.
பெரும்பாலான நேரங்களில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிறகு திட்ட பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை; ஆனால், நிதின் கட்கரி அறிவிக்கும் திட்டங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற சில நாள்களிலேயே அதற்கான பணி தொடங்கிவிடும். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் பிரதிநிதி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு கட்கரி சிறப்பான எடுத்துக்காட்டு.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக கட்கரி பொறுப்பேற்பதற்கு முன்பு, 5,000 கிமீ வரையில் தான் பணிகள் நடைபெற்றிருந்தது. அவர் பதவியேற்ற பிறகு, 12,000 கிமீக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
பின்னர் பேசிய கட்கரி, "மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளூர் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் தூர்வாரியது. அகமத்நகர் மாவட்டத்தில் தண்ணீர் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என மகாராஷ்டிரா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப்பை கேட்டு கொள்கிறேன். நீரோடைகள் மற்றும் குளங்களின் ஆழத்தை அதிகரிப்பது நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க உதவுகிறது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...