ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இந்தியா பாதுகாப்பாக உள்ளது: கர்நாடக அமைச்சர்

ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டில் இல்லையெனில், இந்தியா இன்னொரு பாகிஸ்தான் ஆகியிருக்கும் என கர்நாடக அமைச்சர் பிரபு சௌஹான் புதன்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :6 அக்டோபர் 2021, 11:34 am

DIN


ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டில் இல்லையெனில், இந்தியா இன்னொரு பாகிஸ்தான் ஆகியிருக்கும் என கர்நாடக அமைச்சர் பிரபு சௌஹான் புதன்கிழமை தெரிவித்தார்.

"இந்தியாவைப் பாதுகாக்கும் தேசப்பற்று அமைப்பு ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் நாடு பாதுகாப்பாக உள்ளது. எந்தவொரு நாட்டையும், படையையும் கண்டு இந்திய மக்கள் அஞ்ச வேண்டாம். ஆர்எஸ்எஸ் அமைப்பு இல்லையெனில் இந்தியா இன்னொரு பாகிஸ்தான் ஆகியிருக்கும்.

ஆர்எஸ்எஸ் குறித்து பேச மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் குமாரசாமிக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார் அமைச்சர் பிரபு சௌஹான்.

முன்னதாக, நாடு முழுவதும் 4,000 ஆட்சிப் பணியாளர்களுக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சியளித்திருப்பதாகவும், அவர்களே தற்போது இந்திய ஆட்சிப் பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக இருப்பதாகவும் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு, தான் எந்தவொரு அமைப்பையும் கட்சியையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என குமாரசாமி விளக்கமும் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.