அக். 14ல் கோவா செல்கிறார் அமித் ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அக்டோபர் 14 ஆம் தேதி கோவா செல்லவிருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(கோப்புப்படம்)

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(கோப்புப்படம்)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அக்டோபர் 14 ஆம் தேதி கோவா செல்லவிருக்கிறார்.
கோவாவில் தர்பந்தோராவில் புதிய தடயவியல் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக அவர் கோவா வரவிருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சர் தீபக் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவா ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை முன்னிலையில் நடைபெறும் ஒரு விழாவில் உரையாற்ற இருப்பதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவுக்காக கோவா வரும் அமித் ஷா தேர்தல் பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துவார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | லக்கிம்பூர் வன்முறை: ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தது உ.பி. அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...