ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

லக்கிம்பூர் சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் அழுத்தத்தால் இருவர் கைது

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் இருவரை வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

News image
இருவர் கைது
Updated On :7 அக்டோபர் 2021, 10:42 am

DIN

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் இருவரை வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை லக்கிம்பூரில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், லக்கிம்பூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று காலை வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், யாரையெல்லாம் கைது செய்துள்ளீர்கள், முதல் தகவல் அறிக்கையில் யார் பெயரெல்லாம் இடம்பெற்றுள்ளது என்பது குறித்த விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, விவசாயிகள் மீது ஏற்றப்பட்ட காரில் இருந்த இரண்டு பேரை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.