பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

இந்திய, சீன எல்லை பிரச்னைக்கு 13ஆம் கட்ட பேச்சுவார்த்தை தீர்வளிக்குமா?

13ஆம் கட்ட பேச்சுவார்த்தை மூன்று முதல் நான்கு நாள்களில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவம் ஊடுருவிய நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 அக்டோபர் 2021, 3:05 pm IST

கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, கடந்தாண்டு மே மாதத்திலிருந்து படை குவிக்கப்பட்டு பதற்றம் நீடித்துவந்தது. படைகளைத் திரும்பப்பெற்று அமைதியை நிலைநாட்ட படைத்தளபதிகள் தலைமையிலான ராணுவ ரீதியான பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் கலந்து கொண்டது.

கடந்த பிப்ரவரியில் நடந்த 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளிலிருந்து இரு நாடுகளின் படைகள் திரும்பப்பெறப்பட்டன. இதையடுத்து, பல மாதங்களாக நீடித்துவந்த பதற்றம் தணிந்தது.

இதையடுத்து, ஏப்ரல் 9ஆம் தேதி லடாக் எல்லையில் மீதமுள்ள படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பங்கேற்கும் 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், லேயை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் 14ஆவது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் தலைமையிலான குழுவினர் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்கள்.

இச்சந்திப்பில் இந்திய சீன எல்லைப்பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்தும், கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களிலிருந்து படைகளை விலக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நடைபெற்ற 11 மற்றும் 12 கட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றன.

இந்நிலையில், 13ஆம் கட்ட பேச்சுவார்த்தை மூன்று முதல் நான்கு நாள்களில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவம் ஊடுருவிய நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. கிழக்கு லடாக்கில் நிலவும் பிரச்னையை தீர்க்கும் வகையிலும் ஹாட் ஸ்பிரிங்கில் படைகளை விலக்கி கொள்வதில் இரு தரப்புக்கும் ஒரு மித்த கருத்து ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த வாரம், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ராணுவ தளபதி முகுந்த் நரவனே அளித்த பேட்டியில், அக்டோபர் இரண்டாவது வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.