பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அக்.18 வரை அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்த உ.பி. காவல்துறை

விவசாயிகள் போராட்டம், பண்டிகைக் கொண்டாட்டங்கள் காரணமாக, உத்தரப்பிரதேச காவல்துறையினர், தங்களது ஊழியர்களுக்கு அக்டோபர் 18 வரை அனைத்து விடுமுறையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

News image

அக்.18 வரை அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்த உ.பி. காவல்துறை

Updated On :11 அக்டோபர் 2021, 8:07 am


லக்னௌ: விவசாயிகள் போராட்டம், பண்டிகைக் கொண்டாட்டங்கள் காரணமாக, உத்தரப்பிரதேச காவல்துறையினர், தங்களது ஊழியர்களுக்கு அக்டோபர் 18 வரை அனைத்து விடுமுறையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் பிரஷாந்த் குமார் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், பண்டிகைக் காலம் நெருங்கவிருப்பதாலும், விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாகவும், உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினருக்கு அக்டோபர் 18 வரை வழங்கப்பட்டிருக்கும் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக எடுக்கப்படும் விடுமுறைகள் மட்டும் தலைமையகம் மூலம் அனுமதிக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகைக் கொண்டாடப்படுவதால், கோயில்கள் பொதுவிடங்களில் மக்கள் கூடுவது அதிகரிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.