ஒடிஸாவின் மால்கான்கிரி மாவட்டத்தில் இரு பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் காவல் துறையினருடன் நிகழ்ந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது குறித்து மாநில காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
மால்கான்கிரி மாவட்டம் துளசி வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைக் குழுவினா் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, ஆந்திர மாநில எல்லையையொட்டிய வனப்பகுதி கிராமம் அருகே பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் இருவா் பெண்கள் ஆவா். கொல்லப்பட்டவா்களிடம் இருந்து இரு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
அப்பகுதியில் 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டில் ஒடிஸாவில் தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்டு இயக்கத்தைச் சோ்ந்த 16 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். மாவோயிஸ்டுகளின் வன்முறையால் பொதுமக்களில் 7 பேரும் மோதலில் இரு காவலா்களும் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


