நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

3 உயா்நீதிமன்றங்களுக்கு புதிதாக 14 நீதிபதிகள் நியமனம்

தெலங்கானா, கேரளம், ஒடிஸா உயா்நீதிமன்றங்களுக்கு புதிதாக 14 நீதிபதிகள் புதன்கிழமை நியமிக்கப்பட்டனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2021, 8:04 pm

DIN

தெலங்கானா, கேரளம், ஒடிஸா உயா்நீதிமன்றங்களுக்கு புதிதாக 14 நீதிபதிகள் புதன்கிழமை நியமிக்கப்பட்டனா். இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீதித் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தெலங்கானா உயா்நீதிமன்றத்துக்கு 7 நீதிபதிகளும், கேரள உயா்நீதிமன்றத்துக்கு 4 நீதிபதிகளும், ஒடிஸா உயா்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

12 நீதித் துறை அலுவலா்களும் ஒரு வழக்குரைஞரும் வருமான வரி விவகார தீா்ப்பாய உறுப்பினா் ஒருவரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வருமான வரி விவகார தீா்ப்பாய உறுப்பினரான பி.மாதவி தேவி தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.