அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பாஜக சாவர்க்கரை 'தேசத் தந்தை' என்று விரைவில் அறிவிக்கும்: அசாதுதீன் ஒவைசி

காந்தியடிகள் கோரிக்கை விடுத்ததன் பேரிலேயே சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னுப்பு கடிதம் எழுதியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததற்கு அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :13 அக்டோபர் 2021, 9:25 am

DIN

காந்தியடிகள் கோரிக்கை விடுத்ததன் பேரிலேயே சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னுப்பு கடிதம் எழுதியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததிருந்தார்.

இதை கடுமையாக விமரிசித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, பாஜக விரைவில் சாவர்க்கரை 'தேசத் தந்தை' என்று அறிவிக்கும் எனக் கூறியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ஒவைசி அளித்த பேட்டியில், "அவர்கள் (பாஜக) பொய்யான வரலாற்றை முன்வைக்கின்றனர். இது தொடர்ந்தால், அவர்கள் அண்ணல் காந்தியை நீக்கிவிட்டு, மகாத்மா காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரை தேசத்தின் தந்தையாக அறிவித்து விடுவார்கள்.

காந்தி படுகொலையில் சாவர்க்கர் உடந்தையாக இருந்ததாக நீதிபதி ஜீவன் லால் கபூரின் விசாரணை ஆணையமே தெரிவித்துள்ளது.

முன்னதாக, 'வீர் சாவர்க்கர்: தி மேன் வூ குட் ஹாவ் பிரிவேன்டட் பார்ட்டிசன்' என்ற புத்தகத்தின் அறிமுக விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், "சாவர்க்கர் பற்றி பொய் பரப்பப்பட்டது.

சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அவர் ஆங்கிலேயே அரசிடம் கருணை மனுக்களைத் தாக்கல் செய்தார் என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. மகாத்மா காந்தி தான் கருணை மனு தாக்கல் செய்யும்படி அவரிடம் கூறினார்" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.