ஜீ நிறுவனத்தை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி?

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இன்வெஸ்கோ ஜீ நிறுவனத்தில் 18 சதவிகித பங்குகளை வைத்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானி, தொலைக்காட்சி ஊடகத்தில் கொடி கட்டி பறக்கும் ஜீ நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைக்க திட்டமிட்டருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

இந்தாண்டு தொடக்கத்தில், ஜீ என்டர்டெயின்மென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவைக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்ததாக முதலீட்டு மேலாண்மை நிறுவனமான இன்வெஸ்கோ தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இன்வெஸ்கோ ஜீ நிறுவனத்தில் 18 சதவிகித பங்குகளை வைத்துள்ளது. முன்னதாக, சோனி இந்தியாவுடன் ஜீ நிறுவனம் இணையும் திட்டத்திற்கு இன்வெஸ்கோ எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தற்போது, இஸ்வெஸ்கோவின் இரட்டை நிலைப்பாடு அம்பலப்பட்டுள்ளதாகவும் ஜீ விமரிசித்திருந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்வெஸ்கோ, நிர்வாகத்தில் கோளாறு இருப்பதாகக் கூறி ஜீ குழுமத்தின் போர்டை மாற்றியமைக்க வேண்டும் என்றும் தலைமை செயல் அலுவலராக உள்ள புனித் கோயங்காவை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, சோனி இந்தியாவுடன் ஜீ நிறுவனம் இணைவதற்கு இன்வெஸ்கோ எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறிய ஜீ நிறுவனம், "ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இதே மாதிரியான ஒப்பந்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள இன்வெஸ்கோ, சோனி நிறுவனத்துடன் இணைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது முரணாக உள்ளது. நிர்வாகத்தில் கோளாறுகள் இருப்பதால் இன்வெஸ்கோ இந்த கோரிக்கையை வைத்தது போல் தெரியவில்லை" என தெரிவித்தது.

ஜீ நிறுவனத்தை கைபற்ற முயற்சிப்பதாக இன்வெஸ்கோ மீது ஜீ  நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. பங்கு தாரர் கூட்டத்தை கூட்ட இன்வெஸ்கோ கோரிக்கை விடுத்திருந்தது. ஜீ நிறுவனம் அதற்கு சம்மதிக்காத நிலையில், இந்திய தீர்ப்பாயத்தில் இன்வெஸ்கோ வழக்கு தொடர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com