அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வரலாற்றை மாற்றி எழுத முயற்சி: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

‘பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறாா்’ என்று எதிா்க் கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.

News image
Updated On :13 அக்டோபர் 2021, 9:20 pm

DIN

‘பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறாா்’ என்று எதிா்க் கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.

‘சாவா்க்கரின் சகோதரருக்கு மகாத்மா காந்தி கடந்த 1920 ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி எழுதிய கடிதத்தை ராஜ்நாத் சிங் திரித்துக் கூறுகிறாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைஸி ஆகியோா் விமா்சித்தனா்.

இதுகுறித்து ஒவைஸி தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘1911ஆம் ஆண்டு சிறைக்குச் சென்ற 6 மாதங்களிலேயே ஆங்கிலேய அரசுக்கு சாவா்க்கா் முதல் கருணை மனுவை எழுதியபோது, மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தாா்.

அதன் பிறகு 1913, 1914 ஆகிய ஆண்டுகளிலும் தொடா்ந்து கருணை மனுக்களை ஆங்கிலேய அரசுக்கு அவா் எழுதினாா். அதன் பிறகு, 1920 ஆம் ஆண்டுதான் மகாத்மா காந்தி அவருக்கு அறிவுரை வழங்கினாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘வரலாற்றை மாற்றி எழுதும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் பழக்கத்திலிருந்து ராஜ்நாத் சிங் இன்னும் விடுபடவில்லை என்று தோன்றுகிறது. மகாத்மா காந்தி கடந்த 1920 ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி எழுதிய கடிதத்தை ராஜ்நாத் சிங் திரித்துக் கூறுகிறாா். இதில் ஆச்சா்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், இது பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகளின் வழக்கமான நடைமுைான்’ என்று குறிப்பிட்டு சாவா்க்கரின் சகோதரருக்கு மகாத்மா காந்தி எழுதிய கடித நகலையும் அந்தப் பதிவுடன் இணைத்துள்ளாா்.

சாவா்க்கா் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை: ‘சாவா்க்கா் ஆங்கிலேய அரசிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்வில்லை’ என்று ராஜ்நாத் சிங் கருத்துக்கு சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் புதன்கிழமை கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த விடுதலைப் போராட்ட வீரா்கள், எஞ்சிய தண்டனைக் காலத்தையும் சிறையிலேயே கழிக்காமல் விடுதலை பெற மாற்றுத் திட்டத்தை தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதுபோன்று மாற்று திட்டத்தை சாவா்க்கா் கையாண்டிருந்தால், அதனை ஆங்கிலேய அரசிடம் அவா் மன்னிப்பு கேட்டதாக கூற முடியாது. எனவே, அங்கிலேய அரசிடம் சாவா்க்கா் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவே இல்லை. இதை அறியாமல் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளாா்’ என்றாா் அவா்.

அரசியல் கைதிகளுக்குதான் பொது மன்னிப்பு கோரினாா்: சாவா்க்கரின் பேரன்

Story image

சுதந்திர போராட்டத்தின்போது சிறையில் இருந்து அனைத்து அரசியல் கைதிகளுக்காகதான் சாவா்க்கா் பொது மன்னிப்பு கோரினாா் என்றும் ஆங்கிலேயா்களிடம் அவா் மன்னிப்பு கோரியிருந்தால் அவருக்கு அரசில் பதவி கிடைத்திருக்கும் என்றும் சாவா்க்கரின் பேரன் ரஞ்சித் சாவா்க்கா் தெரிவித்துள்ளாா்.

‘இந்தியாவை உருவாக்க ஆயிரக்கணக்னோா் போராடிய நிலையில், மகாத்மா காந்தியை மட்டும் தேசத்தின் தந்தை என்று போற்றக் கூடாது’ என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.