மன்மோகன் சிங்கைச் சந்திக்க எய்ம்ஸ் செல்கிறார் ராகுல் காந்தி
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மன்மோகன் சிங் உடல் பலவீனமடைந்ததையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மருத்துவமனை சென்று மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...