

தில்லி எல்லை அருகே விவசாயிகள் போராடும் இடத்தில் கை, கால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 10 மாதத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடமான ஹரியாணா மாநிலம் சோனிபட் பகுதியில் கை, கால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலமானது காவல்துறையின் தடுப்பில் தொங்கவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹன்ஸ்ராஜ் கூறியது:
இன்று காலை 5 மணியளவில் கை, கால் வெட்டப்பட்டு தொங்கவிடப்பட்ட ஒரு சடலம் விவசாயிகள் போரட்டம் நடத்திவரும் இடத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.
கொல்லப்பட்டது யார்? கொன்றது யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.