பாம்போர்: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி உமர் முஸ்தாக் காண்டே இருக்குமிடம் தெரிந்து சுற்றிவளைக்கப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஆய்வாளர் விஜய் குமார் கூறினார். ஸ்ரீநகர், பகத் பகுதியில் இரண்டு காவலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் இதர குற்றச் செயல்களில் இவருக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பயங்கரவாதி பதுங்கியிருந்த பாம்போர் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


