‘40% பெண்களுக்கு வாய்ப்பு என பிரியங்கா காந்தி அறிவித்திருப்பது அரசியல் நாடகம்’: மாயாவதி

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டப்பேரவை இடங்களில் 40 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளது அரசியல் நாடகம் என மாயாவதி தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு முதல் பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பலமுனைப் போட்டிகள் நிலவி வருகின்றன.

இதையும் படிக்க | 

குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெற்றி பெற பல்வேறு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,  “உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 400 தொகுதிகளில் 40 சதவீதத்தை பெண்கள் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க | 

இந்நிலையில் பிரியங்கா காந்தியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, “ஆட்சியில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சி தலித், பெண்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களைக் குறித்து கவலைப்படுவதில்லை” என விமரிசித்துள்ளார்.

மேலும், “தற்போது பெண்களுக்கு 40 சதவிகிதம் வாய்ப்பளிக்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்திருப்பது அரசியல் நாடகத்தைத் தவிர வேறு எதுவுமில்லை” என மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com