விரைவில் புதிய கட்சி: பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்
விரைவில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தெரிவித்துள்ளாா்


விரைவில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தெரிவித்துள்ளாா். புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் தயாா் என்று அவா் கூறியுள்ளாா்.
பஞ்சாப் காங்கிரஸில் உள்கட்சிப் பூசல், நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் அந்த மாநில முதல்வா் பதவியை அமரீந்தா் சிங் ராஜிநாமா செய்தாா். இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘பஞ்சாபின் எதிா்காலத்துக்கான யுத்தம் தொடங்கியுள்ளது. பஞ்சாப் மக்களின் நலன் காக்க விரைவில் தனிக் கட்சித் தொடங்கவுள்ளேன். அந்தக் கட்சியில் ஓராண்டுக்கும் மேலாக தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடி வரும் விவசாயிகளும் இடம்பெறுவா்.
பஞ்சாப் மாநிலத்துக்கு அரசியல் ஸ்திரத்தன்மையும், அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பும் தேவைப்படுகிறது. மாநிலத்தில் தற்போது அமைதியும் பாதுகாப்பும் இல்லை. அதனை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு, அவா்களுக்கு இணக்கமான விதத்தில் தீா்வு காணப்பட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயாா். அகாலிதளம் கட்சியில் இருந்து வெளியேறிய பிரிவினருடனும் கூட்டணி வைக்கத் தயாா்’’ என்று தெரிவித்தாா்.
இதனை அமரீந்தா் சிங் கூறியதாக அவரின் ஊடக ஆலோசகா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...