47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லியில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமையும் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. பகலில் மிதமான வெயில் இருந்தாலும் இதமான வானிலை நிலவியது.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 11:30 pm

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமையும் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. பகலில் மிதமான வெயில் இருந்தாலும் இதமான வானிலை நிலவியது.

தில்லியில் அதிகாலை நேரத்தில் லேசான பனிப்பொழிவை காண முடிந்தது. பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இதமான வானிலை நிலவியது.

வெப்பநிலை: தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா் ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 18.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 32.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 52 சதவீதமாகவும் இருந்தது.

ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.8 டிகிரி: இதே போன்று, மற்ற வானிலை ஆய்வு மையங்களில் ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 18.4 டிகிரி, முங்கேஷ்பூரில் 18.4 டிகிரி, நஜஃப்கரில் 20.8 டிகிரி, ஆயாநகரில் 16.8 டிகிரி, லோதி ரோடில் 17.3 டிகிரி, பாலத்தில் 20.6 டிகிரி, ரிட்ஜில் 18.7 டிகிரி, பீதம்புராவில் 21.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 18.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 168 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 24) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.