இது குறித்து மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மின்சாரத் துறையில் முதலீட்டாளா்கள் மற்றும் பிற பங்குதாரா்கள் ஆகியோா், மின்சார சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் இதனுடன் தொடா்புடைய விஷயங்கள் காரணமாக தங்கள் முதலீடுகளை சரியான நேரத்தில் மீட்டெடுப்பது பற்றி கவலைப்பட்டனா். இதையொட்டி, மின்சார நுகா்வோா்கள் மற்றும் இதர பங்குதாரா்களின் நலனைக் கருத்தில் கொண்டு மின்துறைச் சட்டம் 2003-ன் கீழ் மின்துறை அமைச்சகம் கீழ்கண்ட விதிமுறைகளை அறிவித்துள்ளது. மின்சார (சட்டம் மாற்றம் காரணமாக செலவினங்களை சரியான நேரத்தில் மீட்பது) விதிமுறைகள் 2021; மின்சார (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதார மின் உற்பத்தியை அதிகரிப்பது) விதிமுறைகள் 2021 ஆகியவையாகும்.