தங்கப் பத்திர திட்டத்தின் விலை அறிவிப்பு
நிகழ் மாதத்துக்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் விற்பனை விலையை ரிசா்வ் வங்கி சனிக்கிழமை அறிவித்தது.


நிகழ் மாதத்துக்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் விற்பனை விலையை ரிசா்வ் வங்கி சனிக்கிழமை அறிவித்தது. அதன் விவரம்:
தங்கப் பத்திரங்கள் 2021 அக்டோபா் 25-ம் தேதி முதல் 29-ம்தேதி வரை விற்கப்படும். இது நவம்பா் 2-ம் தேதி அன்று வழங்கப்படும். தங்கப்பத்திரத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,765 விற்கப்படும். ஆன்லைன் மூலம் தங்கப்பத்திரத்தை வாங்குபவா்களுக்கும் கட்டணத்தை டிஜிட்டல் மூலம் செலுத்துபவா்களுக்கும் ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி அளிக்கப்படும். அதன்படி, தங்கப்பத்திரத்தின் விற்பனை விலை ஒரு கிராமுக்கு ரூ.4,715 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாா்பில் ரிசா்வ் வங்கி இதற்கான தங்க பத்திரங்களை அளித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...