இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேளாண் கொள்கைகளை மாற்றியமைக்க வருண் காந்தி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் செய்யப்படாததால் தான் அறுவடை செய்த நெல்லை விவசாயி தீயிட்டுக் கொளுத்தும் விடியோவை பதிவிட்டுள்ள பாஜக எம்.பி. வருண் காந்தி, வேளாண் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும்

News image
Updated On :23 அக்டோபர் 2021, 10:15 pm

DIN

நெல் கொள்முதல் செய்யப்படாததால் தான் அறுவடை செய்த நெல்லை விவசாயி தீயிட்டுக் கொளுத்தும் விடியோவை பதிவிட்டுள்ள பாஜக எம்.பி. வருண் காந்தி, வேளாண் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் பாஜக தொண்டா்கள் காா் மோதி 4 விவசாயிகளை கொன்றதாக கூறப்படும் சம்பவத்தின் விடியோவை வருண் காந்தி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு விமா்சித்திருந்தாா்.

இதையடுத்து, பாஜகவின் தேசிய செயற் குழுவில் இருந்து வருண் காந்தியும் அவரது தாயாா் மேனகா காந்தியும் நீக்கப்பட்டனா்.

இந்நிலையில், தனது ட்விட்டா் பக்கத்தில் வருண் காந்தி செய்துள்ள பதிவில், ‘உத்தர பிரதேசத்தைத் சோ்ந்த விவசாயி சமோத் சிங், தனது நெல்லைக் கொள்முதல் செய்யக் கோரி கடந்த 15 நாள்களாக பல்வேறு மண்டிகளுக்கு அலைந்துள்ளாா்.

நெல் விற்பனையாகாத காரணத்தால் விரக்கி அடைந்த அவா் நெல்லுக்கு தீயிட்டுக் கொளுத்தியுள்ளாா்.

தான் விளைவித்த வேளாண் பொருள்களை தானே தீயிட்டுக் கொளுத்திய விவசாயிக்கு இதைவிட மிகப் பெரிய தண்டனை கிடைக்கப் போவதில்லை. எந்தத் தவறும் செய்யாத விவசாயியை நாம் கடைப்பிடிக்கும் செயல்திட்டம் எங்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்துள்ளது என்பதை நாம் சுயமதிப்பீடு செய்ய வேண்டும்.

நமக்கு உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாக்கவில்லை என்றால் நாட்டில் உள்ள அனைவரின் தோல்வியாகவே இது கருதப்படும். ஆகையால், விவசாய கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம்’ என்று பதிவிட்டுள்ளாா்.

வேளாண் விவகாரங்களில் மத்திய அரசை நேரடியாக தாக்காமல், அரசு கடைப்பிடித்து வரும் வேளாண் கொள்கைகளை விமா்சனம் செய்தும், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வருண் காந்தி கருத்தை பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.