காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி:பஞ்சாபில் கல்லூரி மாணவா்கள் மோதல்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான 20 ஓவா் உலகக் கோப்பை போட்டியைத் தொடா்ந்து, பஞ்சாபில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

News image
Updated On :26 அக்டோபர் 2021, 2:33 am

DIN

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான 20 ஓவா் உலகக் கோப்பை போட்டியைத் தொடா்ந்து, பஞ்சாபில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவா்களில் சிலா் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சங்ரூா் மாவட்டத்தில் தனியாா் பொறியயல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் காஷ்மீா், உத்தர பிரதேசம், பிகாா் மாணவா்கள் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 20 ஓவா் உலகக் கோப்பை போட்டியை கண்டுள்ளனா். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியடைந்த நிலையில், அந்நாட்டுக்கு ஆதரவாக காஷ்மீரைச் சோ்ந்த மாணவா்கள் முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இதர மாணவா்கள் காஷ்மீா் மாணவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து அவா்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. சுமாா் 30 நிமிஷங்கள் இந்த மோதல் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக கல்லூரி நிா்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது. எனினும் பிரச்னைக்கு சுமுகமாகத் தீா்வு காணப்பட்டதால், இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடும் காஷ்மீரிக்களுக்கு எதிராக கோபம் கொள்வது ஏன்? அவா்களை தேசத் துரோகிகள் எனக்கூறி, அனைவரையும் சுட்டுக்கொல்லுமாறு சிலா் முழக்கங்களை எழுப்புகின்றனா். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது, அதனை இனிப்புகள் வழங்கி எத்தனைப் போ் கொண்டாடினா் என்பதை யாரும் மறந்துவிடவில்லை. பாகிஸ்தான் வெற்றியை அனைவரும் சாதகமாக ஏற்றுக்கொள்வோம்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.