100 கோடி தடுப்பூசி மட்டுமல்ல இதையும் மோடி கொண்டாடலாம்: எதைச் சொல்கிறார் ப. சிதம்பரம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.


புது தில்லி: நாட்டில் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிலையில், 100 கோடி தடுப்பூசி மட்டுமல்ல, மற்ற சதங்களையும் பிரதமர் மோடி கொண்டாடலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, பிரதமர் மோடி தலைமையிலான அவரது அமைச்சர்கள், 100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து தங்களது கொண்டாட்டங்களையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படிக்கலாமே.. அதிவிரைவாகப் பரவும் உருமாறிய கரோனா ஏஒய். 4.2: சவாலை எதிர்கொள்ள நாடு தயாரா?
இதுபோல, இதர சதங்களையும் கொண்டாடுவதில் பிரதமர் மோடி முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ கடந்தது. தற்போது டீசல் விலை ரூ.100-ஐ கடந்து விட்டது.
எப்போது ஒரு எரிவாயு உருளையின் விலை ரூ.1000ஐ தொடுகிறேதா, அப்போது கொண்டாடுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...