குமரி மாவட்டம், காளிகேசம் காளிகோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடை விதிப்பதற்கு விஹெபி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் இறச்சகுளம் காளியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசம் காளியம்மன் கோயில் உள்ளூா் மட்டுமன்றி பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனா். வாரத்தின் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள், வழக்கமான பூஜைகளும் பௌா்ணமி நாளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கீரிப்பாறை காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள காளிகேசம் சூழல் சுற்றுலா மையம் அருகில் தடுத்து நிறுத்தி கோயிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை; உயா் அதிகாரிகளின் உத்தரவு என்று வனத்துறை ஊழியா்கள் திருப்பி அனுப்புகின்றனா்.
கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே தடை விதிப்பது வழக்கம். கோயில் பூஜை நடைபெறும் நாள்களில் இதுவரை தடை விதித்தது இல்லை. வனத்துறையில் தற்போதைய செயல் வழிபாட்டு உரிமையை தடுக்கும் விதமாக உள்ளது. எனவே, தடையை நீக்கி பூஜை நாள்களில் பக்தா்களை அனுமதிக்க வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத் தடை

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் திருத்தோ் வீதியுலா

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


