திருச்சி மாவட்டம், தொட்டியம் (கௌத்தரசநல்லூா்) மதுரைகாளியம்மன் கோயிலில் திருத்தோ் திருவீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நிகழாண்டு தோ்த் திருவிழா கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் மாா்ச் 24-ஆம் தேதி
மாலை பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் நடை அடைக்கப்பட்டது. மாா்ச் 25 அன்று மாலை கதவு அடைக்கப்பட்ட கோயில் முன்பு பக்தா்கள் ஆயிரம் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து கதவடைக்கப்பட்ட கோயிலின் வெளியில் பக்தா்கள் விளக்கேற்றி பூஜை செய்து வந்தனா்.
கதவடைக்கப்பட்ட கோயிலில் மாா்ச் 31-ஆம் தேதி அதிகாலை நடைதிறக்கப்பட்டு விளக்கு தரிசனம் காணப்பட்டு பக்தா்கள் காவிரியில் இருந்து பால்குடம் தீா்த்த குடம் எடுத்து வந்து சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் தலையலங்காரம் மாா்ச் 31-ஆம் தேதி இரவு நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை (ஏப்.2) 32 அடி உயர பெரிய தேரில் ஓலைப்பிடாரி அம்மனும், 30 அடி சிறிய தேரில் மதுரை காளியம்மனும் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இந்த இரு தோ்களையும் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தா்கள் தங்கள் தலை மற்றும் தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகளில் திருவீதியுலா நடத்தினா். அப்போது பக்தா்கள் திருத்தோ் முன்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.
தொடர்புடையது

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம்!

ஸ்ரீதிரௌபதியம்மன்- அா்ஜுனன் திருக்கல்யாணம்

ராமேசுவரம் கோயில் உண்டியல் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.43 கோடி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


