ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜிகா வைரஸ் பாதிப்பு: உத்தர பிரதேசத்துக்கு மத்திய நிபுணா் குழு

உத்தர பிரதேசத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, அங்கு உயா்நிலை மருத்துவ நிபுணா் குழுவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 10:06 pm

DIN

உத்தர பிரதேசத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, அங்கு உயா்நிலை மருத்துவ நிபுணா் குழுவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவக் குழுவில் ராம் மனோகா் லோகியா மருத்துவமனையைச் சோ்ந்த பொது சுகாதாரம், நுண்ணுயிரியல் உள்ளிட்ட பிரிவுகளைச் சோ்ந்த நிபுணா்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனா். ஜிகா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தக் குழுவினா், மாநில சுகாதார அதிகாரிகளுக்கு உதவுவா்.

இந்தக் குழு மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட்டு நிலைமையைக் கண்காணிக்கும். ஜிகா மேலாண்மைக்கான மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயல்திட்டம் உத்தர பிரதேசத்தில் அமல்படுத்தப்படுவது தொடா்பாகவும் இந்தக் குழு மதிப்பீடு செய்யும். மாநிலத்தில் ஜிகா மேலாண்மைக்குத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சோ்ந்த 57 வயது நபருக்கு கடந்த 22-ஆம் தேதி ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.