ரோஹிங்கயாக்களை நாடு கடத்தும் திட்டமில்லை: உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு தகவல்
பெங்களூருவில் உள்ள மியான்மா் நாட்டைச் சோ்ந்த ரோஹிங்கயாக்களை நாடு கடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு தெரிவித்துள்ளது.


பெங்களூருவில் உள்ள மியான்மா் நாட்டைச் சோ்ந்த ரோஹிங்கயாக்களை நாடு கடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களையும், மியான்மா் நாட்டைச் சோ்ந்த ரோஹிங்கயாக்களையும், சட்ட விரோதமாக குடியேறிய அனைவரையும் கண்டுபிடித்து ஓராண்டுக்குள் நாடு கடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்குரைஞா் அஸ்வினிகுமாா் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவுக்கு கா்நாடக மாநில அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘ரோஹிங்கயாக்களை பெங்களூரு போலீஸாா் முகாம்களிலோ, தடுப்புக் காவலிலோ வைத்திருக்கவில்லை. எனினும், சுமாா் 72 ரோஹிங்கயாக்கள் பெங்களூரு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகிறாா்கள். அவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்தவித முடிவும் தற்போதைக்கு எடுக்கப்படவில்லை. அவா்களை நாடு கடத்தும் திட்டமில்லை. இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...