பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காஷ்மீர் சாலை விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே ஏற்பட்ட விபத்தில் பலியான 10 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

News image
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
Updated On :6 நவம்பர் 2021, 11:12 am

DIN

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே ஏற்பட்ட விபத்தில் பலியான 10 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீர் மாநிலம் தாத்ரியிலிருந்து தோடா நோக்கிச் சென்ற மினி பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 10 பேர் பலியானதோடு 12 பேர் காயடைந்தனர். உடனடியாக மீட்புபடையினர் உதவியுடன் உடல்கள் கைப்பற்றப்பட்டதோடு காயமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அம்மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களுக்கு இரங்கலையும் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்பவர் நலமடைய  பிராத்திக்கிறேன் எனத் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.