பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு: யோகி ஆதித்யநாத்
பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுபவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுபவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 24ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற டி20 உலக கோப்பைப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் 5 மாவட்டங்களிலிருந்து 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் வெற்றி கொண்டாட்டங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுபவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...