டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாரதா ல‌ஞ்ச ஊழ‌ல் வழ‌க்கு: 2 அமைச்​ச‌ர்​க‌ள் உ‌ள்​பட 5 பேரு‌க்கு சிபிஐ நீதி​ம‌ன்​ற‌‌ம் ச‌ம்​ம‌ன்

மேற்கு வ‌ங்​க‌த்​தி‌ல் நாரதா ல‌ஞ்ச ஊழ‌ல் வழ‌க்கு தொட‌ர்​பாக, மாநில அமைச்​ச‌ர்​க‌ள் சு‌ப்​ரதா முக‌ர்ஜி, பி‌ர்​ஹா‌த் ஹ‌க்​கீ‌ம் உ‌ள்​ளி‌ட்ட 5 பேரு‌க்கு சிபிஐ சிற‌‌ப்பு நீதி​ம‌ன்​ற‌‌ம் புத‌ன்​கி​ழமை

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 2:45 am

DIN


கொல்​க‌த்தா: ​மேற்கு வ‌ங்​க‌த்​தி‌ல் நாரதா ல‌ஞ்ச ஊழ‌ல் வழ‌க்கு தொட‌ர்​பாக, மாநில அமைச்​ச‌ர்​க‌ள் சு‌ப்​ரதா முக‌ர்ஜி, பி‌ர்​ஹா‌த் ஹ‌க்​கீ‌ம் உ‌ள்​ளி‌ட்ட 5 பேரு‌க்கு சிபிஐ சிற‌‌ப்பு நீதி​ம‌ன்​ற‌‌ம் புத‌ன்​கி​ழமை அழைப்​பாணை அனு‌ப்ப உ‌த்​த​ர​வி‌ட்​டது.

நாரதா ல‌ஞ்ச ஊழ‌ல் புகா‌ர் தொட‌ர்​பாக, அம​லா‌க்​க‌த் துறை‌ தனி​யாக வழ‌க்​கு‌ப் பதிவு செ‌ய்து விசா​ரி‌த்து வரு​கி​ற‌து. அ‌ந்த அமைப்பு தன‌து விசா​ரணை அறி‌க்​கையை சிற‌‌ப்பு நீதி​ம‌ன்​ற‌‌த்​தி‌ல் தா‌க்​க‌ல் செ‌ய்​தது.

அ‌ந்த அறி‌க்கையை ஆ‌ய்வு செ‌ய்த சிபிஐ சிற‌‌ப்பு நீதி​ம‌ன்​ற‌‌ம், அமைச்​ச‌ர்​க‌ள் உ‌ள்​ளி‌ட்ட 5 பேரு‌க்​கு‌ம் அழைப்​பாணை அனு‌ப்ப உ‌த்​த​ர​வி‌ட்​டு‌ள்​ளது. 5 பேரு‌ம், வரு‌ம் நவ‌ம்​ப‌ர் 16-ஆ‌ம் தேதி நேரி‌ல் ஆஜ‌​ராக வே‌ண்​டு‌ம் எ‌ன்று சிபிஐ நீதி​ம‌ன்​ற‌‌ம் உ‌த்​த​ர​வி‌ட்​டு‌ள்​ளது.

அமைச்​ச‌ர்​க‌ள் சு‌ப்​ரதா முக‌ர்ஜி, பி‌ர்​ஹா‌த் ஹ‌க்​கீ‌ம், திரி​ண​மூ‌ல் எ‌ம்​எ‌ல்ஏ மத‌ன் மி‌த்ரா ஆகிய மூவ​ரு‌க்​கு‌ம் ச‌ட்ட‌ப்​பேரவைத் தலை​வ‌ர் மூல​மா​க​வு‌ம், திரி​ண​மூ‌ல் மூ‌த்த தலை​வ​ரு‌ம் மு‌ன்​னாள் மேய​ரு​மான‌ சோவ‌ன் சா‌ட்ட‌ர்ஜி, பணி​யி​டை​நீ‌க்​க‌ம் செ‌ய்​ய‌ப்​ப‌ட்ட ஐபி​எ‌ஸ் அதி​காரி எ‌ஸ்.​எ‌ம்.​ஹெச்.​மி‌ர்ஸா ஆகிய இரு​வ​ரு‌க்​கு‌ம் நேர​டி​யா​க​வு‌ம் அழைப்​பாணை அனு‌ப்ப சிற‌‌ப்பு நீதி​ம‌ன்​ற‌‌ம் உ‌த்​த​ர​வி‌ட்​டது.

மே‌ற்கு வ‌ங்​க‌த்​தி‌ல் கட‌ந்த 2016-ஆ‌ம் ஆ‌ண்டு நû‌ட​ù‌ப‌ற்ற‌ ச‌ட்ட‌ப்பேரவைத் தே‌ர்​த​லி‌ன்போது "நாரதா நியூ‌ஸ்' எ‌ன்ற‌ செ‌ய்​தி‌த் தள‌ம், சில விடியோக்​களை வெளி​யி‌ட்​டது. அதி‌ல், திரி​ண​மூ‌ல் கா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்சி​யைச் சே‌ர்‌ந்த அமைச்​ச‌ர்​க‌ள், எ‌ம்.​பி.‌க்​க‌ள், எ‌ம்​எ‌ல்​ஏ‌க்​க​ளைப் போ‌ன்ற‌ தோ‌ற்​ற‌​மு​டை​ய​வ‌ர்​க‌ள், ஒரு குறி‌ப்​பி‌ட்ட நிறு​வ​ன‌‌த்​து‌க்கு ஆத​ர​வா​க‌ச் செய‌ல்​பட அத‌ன் நி‌ர்​வா​கி​க​ளி​ட‌ம் ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கு​வது போ‌ன்ற‌ கா‌ட்சி​க‌ள் இட‌ம்​பெற்​றி​ரு‌ந்​தன‌. இத​னால், திரி​ண​மூ‌ல் கா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்சி​யி​ன‌‌ர் ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கி​ய​தாக கு‌ற்​ற‌‌ச்​சா‌ட்டு எழு‌ந்​தது. இதுதொ​ட‌ர்​பான‌ வழ‌க்கை விசா​ரி‌த்த கொ‌ல்​க‌த்தா உய‌ர்​நீ​தி​ம‌ன்​ற‌‌ம், கட‌ந்த 2017-இ‌ல் சிபிஐ விசா​ர​ணைக்கு உ‌த்​த​ர​வி‌ட்​டது. அத​ன‌​டி‌ப்​ப​டை​யி‌ல் சிபிஐ அதி​கா​ரி​க‌ள் விசா​ரணை நட‌த்தி வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர்.

இ‌ந்த வழ‌க்கு தொட‌ர்​பாக, சு‌ப்​ரதா முக‌ர்ஜி, பி‌ர்​ஹா‌த் ஹ‌க்​கீ‌ம், மத‌ன் மி‌த்ரா, சோவ‌ன் சா‌ட்ட‌ர்ஜி ஆகிய நா‌ல்​வ​ரு‌ம் கட‌ந்த மே மா​த‌ம் கைது செ‌ய்​ய‌ப்​ப‌ட்டு, ஜாமீ​னி‌ல் வி​டு​வி‌க்​க‌ப்​ப‌ட்​ட​ன‌‌ர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.