ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ராணுவ வீரரைக் கடுமையாகத் தாக்கிய காவல் துறையினர்: வைரலாகும் விடியோ!

​ஜார்க்கண்ட் மாநிலத்தில் முகக் கவசம் அணியாத காரணத்துக்காக ராணுவ வீரர் ஒருவர் காவல் துறையினரால் புதன்கிழமை கடுமையாகத் தாக்கப்பட்டார்.

News image
ராணுவ வீரர்
Updated On :2 செப்டம்பர் 2021, 11:01 am

DIN


ஜார்க்கண்ட் மாநிலத்தில் முகக் கவசம் அணியாத காரணத்துக்காக ராணுவ வீரர் ஒருவர் காவல் துறையினரால் புதன்கிழமை கடுமையாகத் தாக்கப்பட்டார்.

காவல் துறையினரால் தாக்கப்பட்ட ராணுவ வீரர் பவன் குமார் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கிராமத்தினர் தடுத்து நிறுத்தியதன் பிறகே, அவர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து சத்ரா காவல் கண்காணிப்பாளர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

இதுபற்றி அவர் தெரிவித்தது:

"இந்த விவகாரம் தொடர்பாக மூன்று காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் முகக் கவசம் அணிந்திருப்பதை சோதனை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராணுவ வீரர் முகக் கவசம் அணியாமல், மூன்று பேருடன் இருசக்கர வாகனத்தில் வந்தது தெரியவந்தது.

காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தியபோது அவர் தவறான முறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன்பிறகே காவலர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.

எந்தவொரு சூழலிலும் அவரைத் தாக்கியது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவேதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.