பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அமித் ஷாவுடன் மேற்கு வங்க ஆளுநர் இன்று சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :6 செப்டம்பர் 2021, 10:09 am

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தலானது செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் நடைபெறும் பவானிப்பூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளார்.

இதற்கு முன்னதாக நடைபெற்று முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் போது வன்முறை வெடித்ததில் எதிர்க்கட்சியினர் பலர் கொல்லப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், மீண்டும் இடைத்தேர்தல நடைபெறுவதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்துவதற்காக இரண்டு நாள் தில்லி பயணத்தை ஆளுநர் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.