தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மேற்கு வங்க இடைத் தேர்தல் : பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தின் பவானிபூர் , ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படிருந்த நிலையில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என திரிணாமுல் காங்கிரஸ

News image
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
Updated On :6 செப்டம்பர் 2021, 7:23 am

DIN

மேற்கு வங்க மாநிலத்தின் பவானிபூர் , ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் சுவெந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். பின் தன் தோல்வியில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

மேலும் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா எதிலும் தோல்வி அடையவில்லை என்பதும் பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக இந்தத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.