விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உத்தரப் பிரதேசம் : டெங்குவைக் கட்டுப்படுத்த 2 தனிக்குழுக்கள் அமைப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 36 சிறார்கள் உட்பட 65 பேர் உயிரிழந்திருப்பதால் அம்மாநில அரசு டெங்குவைக்

News image
உத்தரப் பிரதேசம் : டெங்குவைக் கட்டுப்படுத்த 2 தனிக்குழுக்கள் அமைப்பு
Updated On :9 செப்டம்பர் 2021, 5:59 am

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 36 சிறார்கள் உட்பட 65 பேர் உயிரிழந்திருப்பதால் அம்மாநில அரசு டெங்குவைக் கட்டுப்படுத்த இரண்டு தனிக்குழுக்களை அமைத்திருக்கிறது.

மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் கடந்த ஆக- 24 ஆம் தேதி   மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியிருந்தார்கள். பின் மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருந்ததால், டெங்கு காய்ச்சல் என்றே மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

பின் மதுரா, ஆக்ரா, மற்றும் ராஜஸ்தானின் பரத்பூர் பகுதிகளில்  மர்ம காய்ச்சலால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த செப்-2  நிலவரப்படி பிரோசாபாத் மாவட்டத்தில்  டெங்கு காய்ச்சலால் 36 சிறார்கள் உட்பட 41 பேரும் மதுராவில் 15 பேரும் பலியாகி இருக்கிறார்கள். மேலும் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபர்களும் அதிகரித்து இருப்பதால் தனி பிரிவை ஒன்றை ஏற்படுத்தி மாவட்ட மருத்துவமனை அவர்களுக்கு தீவிர சிகிச்சையை அளித்து வந்தனர்.

அதற்கு முன்னதாக  (செப்-1)  அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குழந்தைகள் இறந்ததால் எழுந்த  விமர்சனங்களைத் தொடர்ந்து  பிரோசாபாத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியை மாற்றம் செய்து வேறு ஒருவருக்கு பொறுப்பை வழங்கியிருந்தார்.

தற்போது நேற்று செப்-8 நிலவரப்படி பிரோசாபாத் மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் டெங்குவைக் கட்டுப்படுத்த 2 தனிக்குழுக்களை அமைத்திருக்கிறார்.

இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி, ‘ இதுவரை 64 முகாம்கள் அமைக்கப்பட்டு 4,500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. டெங்கு உறுதியானவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கபட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.