தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பஞ்சாப் புதிய முதல்வராக பதவியேற்றார் சரண்ஜீத் சிங் சன்னி

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி (58) இன்று காலை பதவியேற்றார். இவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

News image

பஞ்சாப் புதிய முதல்வராக பதவியேற்றார் சரண்ஜீத் சிங் சன்னி

Updated On :20 செப்டம்பர் 2021, 10:34 am

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி (58) இன்று காலை பதவியேற்றார். இம்மாநிலத்தில் முதல்வரான முதல் தலித் சமூகத்தைச் சோ்ந்தவா் இவா்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து,  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சண்டீகரில் உள்ள ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சரண்ஜீத் சிங் சன்னி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி இன்று பதவியேற்றுக் கொண்டார். சண்டீகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும், பஞ்சாப் துணை முதல்வராக சுக்ஜிந்தர் ரன்தவாவும் பிரம் மொஹிந்த்ராவும் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்வில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நவ்ஜோத் சிங் சித்து, ஹரிஷ் ராவத் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.