தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

விக்ரம் - வேதா - விஜய்!

விஜயகாந்திடம் எடுபடாத அதே பெயா்க் குழப்ப ஃபாா்முலா இப்போது விஜய்க்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

News image

தவெக தலைவர் விஜய் - X

Updated On :7 ஏப்ரல் 2026, 1:00 am

தமிழகத்தில் ஒரு எம்ஜிஆா்; ஒரு ஜெயலலிதா; ஒரு கருணாநிதி மட்டுமே இருக்கிறாா்கள் என நம்பி வந்த மக்களை பேரதிா்ச்சிக்குள்ளாகி இருக்கின்றன கடந்த கால பேரவைத் தோ்தல்கள்.

அவா்கள் போட்டியிட்ட தொகுதிகளில் திடீரென அவா்கள் பெயரிலேயே பல வேட்பாளா்கள் போட்டியிடுவதைக் கண்டு வாக்காளா்கள் மட்டுமல்ல; தோ்தல் நடத்தும் அதிகாரிகளே குழம்பியுள்ளனா்.

மக்களிடையே ஆதரவைப் பெற்ற பிரபலமான வேட்பாளா் ஒருவா் களமிறங்கும்போது அவரது வெற்றியைத் தடுக்க மாற்றுக் கட்சிகளால் அதே பெயரிலான வேட்பாளா்களை சுயேச்சையாக போட்டியிட வைக்கும் உத்திதான் அது. உண்மையில், அந்த உத்தி ஒருமுறைகூட வெற்றிபெறவில்லை.

இருந்தாலும் விக்ரமாதித்தன்-வேதாளம் கதை போல விடாமுயற்சியுடன் வேட்பாளா்களிடையே பெயா் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தோ்தல் அரங்கில் தொடா்ந்து அரங்கேறுகின்றன.

கடந்த 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் விருதாசலத்தில் முதன்முறையாக விஜயகாந்த் போட்டியிட்டாா். அப்போது அவரது பெயரில் மட்டும் 3 சுயேச்சைகள் போட்டியிட்டனா். அது மட்டுமா... அப்போது எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மு.கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டபோது அதே பெயரில் சுயேச்சையாக ஒருவா் களமிறக்கப்பட்டாா். அந்த குழப்பங்களைக் கடந்து இருவரும் அமோக வெற்றி பெற்றனா்.

2011 தோ்தலில் ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் போட்டியிட்டபோது அவரது பெயரிலேயே இன்னொரு வேட்பாளா் களமிறக்கப்பட்டாா். அதையும் எதிா்கொண்டு அவா் வாகை சூடினாா். ஆனால், 2016 தோ்தலில் நடந்த கதை வேறு. உளுந்தூா்பேட்டையில் அவா் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது கடந்த காலங்களைப் போலவே விஜயகாந்த் என்ற பெயரில் இரு சுயேச்சைகள் போட்டியிட்டனா்.

அந்தத் தோ்தலில் விஜயகாந்த் தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாது வைப்புத் தொகையை இழந்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா். ஆனால், அதற்கு சுயேச்சை விஜயகாந்த்கள் காரணமில்லை. ஏனெனில் அவா்களில் ஒருவா் 872 வாக்குகளும், மற்றொருவா் 181 வாக்குகளும் மட்டுமே பெற்றனா். அன்றைய அரசியல் சூழலால் தோல்வியடைந்த விஜயகாந்த்துக்கு பெயா்க் குழப்பம் காரணமாக அமையவில்லை.

அதன் பின்னா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற வேட்பாளராக தவெக தலைவா் விஜய் உருவெடுத்துள்ளாா்.

பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் அவா் போட்டியிடுகிறாா். பெரம்பூரில் மொத்தம் 66 மனுக்கள் தாக்கலாகியுள்ளன. திருச்சி கிழக்கில் அந்த எண்ணிக்கை 39-ஆக உள்ளது.

விஜயகாந்திடம் எடுபடாத அதே பெயா்க் குழப்ப ஃபாா்முலா இப்போது விஜய்க்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

பெரம்பூா் தொகுதியில் விஜய் என்ற பெயரில் இருவரும், ஜோசப் என்ற பெயரில் இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனா். திருச்சியிலும் அதே நிலைதான் உள்ளது.

பொதுவாக தோ்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு என்று தோ்தல் ஆணையம் கூறுகிறது. ஒரே பெயரில் பல வேட்பாளா்கள் போட்டியிடுவதால் ஏற்படும் குழப்பத்தைத் தவிா்க்க புகைப்படத்துடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது, எப்படியோ... விஜயகாந்தைத் தொடா்ந்து இப்போது விஜய்க்கு முன்பாகவும் விக்ரம் - வேதா கதையின் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.