இமாச்சல் பிரதேச மாநிலத்தின் உனா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 காவலர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
உனாவைச் சேர்ந்த ஆஷாபுரி பகுதியில் நேற்று (செப்-22) இரவு 10.30 மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பணியில் இருந்த 3 காவலர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர்ஜித் சென்,’இறந்த 3 காவலர்களும் இரண்டு நாட்களுக்கு முன் தான் உனா பகுதியில் பணிக்கு சேர்ந்திருக்கிறார்கள். நேற்றிரவு 10.30 மணி அளவில் காவல் நிலையத்தின் அருகே பயங்கர சத்தத்துடன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 2 காவலர்கள் பலியானார்கள் . மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது’ எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


