47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

8 மாநிலங்களில் ரூ.2,903 கோடியில் மூலதன செலவின திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

புது ‘2021-22-க்கான மூலதன செலவுகளுக்கு மாநிலங்களுக்கு சிறப்பு உதவி’ என்ற திட்டத்தின் கீழ் எட்டு மாநிலங்களில் ரூ.2,903.80 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒப்புதல் அளி

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 7:37 pm

DIN

புது ‘2021-22-க்கான மூலதன செலவுகளுக்கு மாநிலங்களுக்கு சிறப்பு உதவி’ என்ற திட்டத்தின் கீழ் எட்டு மாநிலங்களில் ரூ.2,903.80 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், பிகாா், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா ஆகிய எட்டு மாநிலங்களுக்கு ரூ.1,393.83 கோடியை அமைச்சகம் விடுவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையையடுத்து, மூலதனச் செலவின் முக்கியத்துவம் மற்றும் மாநில அரசுகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்திட்டம் கடந்த ஏப்ரலில் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகளுக்கு 50 வருட வட்டி இல்லாத கடனாக சிறப்பு உதவி வழங்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டில் ரூ.15,000 கோடிக்கு மிகாமல் இது வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 27 மாநிலங்களின் ரூ.11,911.79 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு செலவினத் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2020- 21-ல் ரூ.11,830.29 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.