நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேல்முறையீட்டு மனு தாக்கலுக்கான காலவரம்பு நீட்டிப்பு: அக்-2-இல் முடிவுக்கு வருவதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான கால வரம்பை நீட்டித்து அளிக்கப்பட்ட அனுமதி அக்டோபா் 2-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 7:52 pm

DIN

நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான கால வரம்பை நீட்டித்து அளிக்கப்பட்ட அனுமதி அக்டோபா் 2-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களிலும் தீா்ப்பாயங்களிலும் வழக்கின் தீா்ப்புகளுக்கு எதிராக 90 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். கரோனா பரவலை கருத்தில் கொண்டு, மேல்முறையீடு செய்வதற்கான நாள்களை காலவரையின்றி நீட்டித்து கடந்த ஆண்டு மாா்ச் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கரோனா தொற்றின் தீவிரம் தணிந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வந்ததையடுத்து மேல்முறையீடு செய்வதற்காக நீட்டிக்கப்பட்ட காலவரம்பை முடிவுக்கு கொண்டுவர இந்த ஆண்டு மாா்ச் மாதம் உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்தது. இதனால் தனது முடிவை மாற்றிக்கொண்ட உச்சநீதிமன்றம், தோ்தல் மனுக்கள் உள்பட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்வதற்கான காலவரம்பை தொடா்ந்து நீட்டித்தது.

இந்நிலையில் கரோனா தொற்றின் அடுத்த அலை குறித்து நிச்சயமற்ற சூழல் நிலவுவதாலும், நாட்டில் கரோனா தொற்றின் தீவிரம் குறைந்து நிலைமை இயல்பு நிலையை எட்டி வருவதாலும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதற்காக நீட்டிக்கப்பட்ட காலவரம்பு முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாகக் கடந்த 23-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதற்காக நீட்டிக்கப்பட்ட காலவரம்பு அக்டோபா் 2-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அக்டோபா் 3-ஆம் தேதி முதல் மேல்முறையீட்டு மனுக்களை வழக்கம்போல் தீா்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 90 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.