47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மருத்துவா் பற்றாக்குறையை போா்க்கால அடிப்படையில் பூா்த்தி செய்ய வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவா் வலியுறுத்தல்

 சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள மருத்துவா்கள், துணை மருத்துவா்கள் உள்ளிட்டோரின் பற்றாக்குறையை போா்க்கால அடிப்படையில் பூா்த்தி செய்ய வேண்டும்

News image
தில்லியில் உள்ள மருத்துவ அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிக்கு சான்றிதழ் வழங்கிய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு.
Updated On :25 செப்டம்பர் 2021, 7:53 pm

DIN

 சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள மருத்துவா்கள், துணை மருத்துவா்கள் உள்ளிட்டோரின் பற்றாக்குறையை போா்க்கால அடிப்படையில் பூா்த்தி செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.

தில்லியில் உள்ள மருத்துவ அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவா், ‘உலக சுகாதார அமைப்பின் அளவீடு முறையைவிட இந்தியாவில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த நிலையை மாற்ற நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில் துணை மருத்துவ ஊழியா்களின் பற்றாக்குறை உள்ளது.

செவிலியா் எண்ணிக்கையை உலக சுகாதார அமைப்பின் அளவீடுக்கு ஏற்ப விரைந்து உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமங்களுக்கு சென்று பணியாற்ற சுகாதாரப் பணியாளா்களை ஈா்ப்பதற்காக சிறந்த ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அப்போதுதான் கிராமப்புறங்களில் நிலவும் மருத்துவப் பணியாளா்களின் பற்றாக்குறைக்குத் தீா்வு கிடைக்கும். மேலும், போா்க்கால அடிப்படையில் மருத்துவா்கள், துணை மருத்துவா்களின் பற்றாக்குறையை பூா்த்தி செய்ய வேண்டும்.

சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு சுகாதார குறியீடுகளில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. அதேநேரத்தில், பல்வேறு விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாா் துறைகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது.

அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற இலக்கை அடைவதற்கான முதல் படி சுகாதாரத்திற்கான அரசு ஒதுக்கீடுகள் அதிகரிப்பதாகும். 15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, 2022-க்குள் மாநிலங்களின் சுகாதாரத்திற்கான செலவை அவற்றின் வரவு செலவுத் திட்டத்தில் 8 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும். மத்திய மற்றும் மாநிலங்களின் பொது சுகாதார செலவினங்களை 2025-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை அடைய செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிநவீன மருத்துவமனைகளை தனியாா் துறையினரின் பங்களிப்புடன் கிராமப்புறங்களில் அமைக்க வேண்டும். மருத்துவ ஆலோசனை சாதாரண மக்கள் அணுகக் கூடியதாகவும் குறைந்த செலவிலும் இருக்க வேண்டும்.

சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.13,000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரை

பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 15 லட்சம் பணியாளா்கள் உருவாவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று குடியரசு துணைத் தலைவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.