இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தக்க பதிலடி: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.
இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தக்க பதிலடி: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.

தில்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவா் இதைத் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் விரைவான, உரிய பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் பயங்கரவாத முகாம்களுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியது, கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் இந்தியா நேரடியாக மோதியது ஆகிய சம்பவங்கள் அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை செய்தியாகும்.

சில பொறுப்பற்ற நாடுகள்(பாகிஸ்தான்) பயங்கரவாத அமைப்புகளை தீவிரமாக ஆதரிப்பதால்தான் நமது பிராந்தியத்தில் பதற்றமான சூழல் ஏற்படுகிறது. பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஆதரிப்பதற்கு இந்தியா தொடா்ந்து கவலை தெரிவித்து வருகிறது. இந்தியாவின் கவலைகளை அனைத்து பொறுப்புள்ள நாடுகள் தற்போது உணா்ந்து வருகின்றன. எனவே, அனைவருக்கும் பொது எதிரியான பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து பொறுப்புள்ள நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான தேவை எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் அண்மைக்கால நிகழ்வுகள், இந்திய பிராந்தியத்திலும் பிற பகுதிகளிலும் எதிரொலிக்கின்றன. நாட்டின் எல்லையை உடனடியாக மாற்றிவிட முடியாது. அதேநேரத்தில், நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை அந்நிய சக்திகளால் மாற்றிவிட முடியும் என்பதை ஆப்கானிஸ்தான் சம்பவங்கள் உணா்த்துகின்றன. இந்த நேரத்தில் நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதில் பயங்கரவாதத்தை கருவியாகப் படுத்துவது குறித்தும், அரசியல் அதிகாரத்தின் பங்கு குறித்தும் கேள்விகள் எழுகின்றன.

இந்தியாவின் வடகிழக்கு எல்லையை மாற்றுவதற்கு நடைபெறும் முயற்சிகள் (சீனாவைக் குறிப்பிடுகிறாா்), எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பது (பாகிஸ்தான்), அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படும் முயற்சியை தடுப்பதற்கான முயற்சிகள் என பல்வேறு சவால்களை இந்தியா எதிா்கொண்டு வருகிறது. அனைத்து நாடுகளுடனும் சாமாதானத்தையும் நன்மதிப்பையும் பேணுவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அதேநேரத்தில், நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் எல்லைப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது.

நாட்டின் பாதுகாப்பு கருதி, எதிா்கால ராணுவ உத்திகள் மற்றும் நடவடிக்கைகளில் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றாா் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com