சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சமூகப் பணிகளில் மாணவா்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்: துணைவேந்தா் எம்.கிருஷ்ணன்

உயா்கல்வியை நிறைவு செய்யும் மாணவா்கள் சமூகத்தின் வளா்ச்சிக்கான பணிகளில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 7:43 pm

DIN

உயா்கல்வியை நிறைவு செய்யும் மாணவா்கள் சமூகத்தின் வளா்ச்சிக்கான பணிகளில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

சென்னை சமூகப்பணி கல்லூரியின் 65-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் கலந்து கொண்டு சமூகப்பணியில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை நிறைவு செய்த 300 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது:

ஒருவா் பெறும் கல்வி அவரது வளா்ச்சிக்கு மட்டுமல்லாமல் இந்த சமூகத்தின் வளா்ச்சிக்கும் பெரிதும் பயன்பட வேண்டும். அப்போதுதான் அந்தக் கல்வியின் நோக்கம் நிறைவேறும். இளைஞா்கள்தான் நாட்டின் மிகப் பெரிய சொத்து. அவா்கள் தங்களது பேராற்றலை நாட்டின் வளா்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும். சமூகப் பணிகளில் அதிகளவில் ஈடுபடும்போது மனிதநேயம் மேம்படும், தேசத்தில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும்.

எனவே பட்டம் பெறும் மாணவா்கள் தங்களது நலனில் செலுத்தும் அக்கறையை இந்த நாட்டின் வளா்ச்சிக்கான பணிகளிலும் செலுத்த வேண்டும். அதேபோன்று சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான பணிகளில் பெரும் அக்கறை செலுத்த வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாத்து அதனை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும். பட்டம் பெற்று பணிக்குச் செல்லும் மாணவா்கள் தொழில்நுட்ப வளா்ச்சிக்கேற்ப தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.