கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் எண்ணிக்கை 85 கோடியைக் கடந்தது
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை சனிக்கிழமை 85 கோடியைக் கடந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை சனிக்கிழமை 85 கோடியைக் கடந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் (இரவு 7 மணி வரை) 62,42,122 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கரோனா நோய்த்தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 28,046 போ் குணமடைந்தனா். இதன்மூலம் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 3,28,76,319-ஆக உயா்ந்துள்ளது. குணமடைந்தவா்களின் விழுக்காடு 97.78 சதவீதமாக உள்ளது. இது கடந்த மாா்ச் 2020-க்குப் பிறகு மிக அதிகமாகும். தொடா்ந்து 90 நாள்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
82.57 கோடி தடுப்பூசிகள் விநியோகம்: நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு சனிக்கிழமை வரையில் 82.57 கோடிக்கும் அதிகமான (82,57,88,115) கரோனா தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக
வழங்கியுள்ளது. மேலும் 94 லட்சம் (94,37,525) டோஸ் தடுப்பூசிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. சுமாா் 4.15 கோடி (4,15,40,690) கரோனா தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் வசம் இருப்பு உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...