யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காஷ்மீரில் பாஜக நிர்வாகியை சுட்டு கொன்ற பயங்கரவாதி படுகொலை

வடக்கு காஷ்மீர் பந்திபோராவில் வாட்ரினா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

News image
கோப்புப்படம்
Updated On :26 செப்டம்பர் 2021, 11:39 am

DIN

ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாஜக நிர்வாகி வசீம் பாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டதில் இவர்களுக்கு தொடர்பு இருப்பததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு காஷ்மீர் பந்திபோராவில் வாட்ரினா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "தேடுதல் வேட்டை நடத்திய பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்குச்சூடு நடத்தினர். 

இதற்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர். இதில், அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்" என்றார். கடந்தாண்டு ஜூலை மாதம், பாஜக மாவட்ட தலைவர் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இவர்களை கொலை செய்த பயங்கரவாதி இன்று நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல் காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து, ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.