ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அமித் ஷா இல்லத்தில் அமரீந்தர் சிங்!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்துக்குச் சென்றுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :29 செப்டம்பர் 2021, 1:15 pm

DIN


பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்துக்குச் சென்றுள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. தகவல்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அவரது தில்லிப் பயணம் அமைந்தது.

அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்தன.

ஆனால், புதிய முதல்வருக்காக தில்லியிலுள்ள இல்லத்தை காலி செய்யவே தில்லி வந்துள்ளதாகவும் எந்த அரசியல் தலைவரையும் சந்திக்கப்போவதில்லை எனவும் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது அமித் ஷா இல்லத்தைச் சென்றடைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.