
இந்தியாவில் கரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்காக விதிக்கப்பட்டுள்ள தடையை அக்- 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிக்க | ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி - நீதிமன்றம்
நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவியதைத் தொடா்ந்து சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வரும் அக்-31 வரை தடை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ‘ஏா் பபுள்’ விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் குறிப்பிட்ட சில மார்க்கங்களில் மட்டும் விமானங்கள் செல்லும் எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.