கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள்: உச்சநீதிமன்றம் கண்டனம்

பட்டாசு தயாரிப்பில் மிகக்கடுமையாக விதிமுறை மீறல்கள் ஏற்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

News image
பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள்: உச்சநீதிமன்றம்
Updated On :29 செப்டம்பர் 2021, 10:14 am

DIN

பட்டாசு தயாரிப்பில் மிகக்கடுமையான முறையில் விதிமுறை மீறல்கள் ஏற்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 
பட்டாசு தயாரிப்பு தொடர்பாக சிபிஐ வழங்கியுள்ள முதல்கட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், பட்டாசு தயாரிப்பு விதிமீறல் தொடர்பான முழு அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிஐ கண்டறிந்த ஆரம்பகட்ட அறிக்கைகளை மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களுக்கு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு தயாரிக்க உதவும் பேரியம் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த தனிமம் பயன்படுத்தப்படுகிறது. பட்டாசு தயாரிப்பில் ஒரு சில நிறுவனங்கள் அதிகமாக பேரியம் தனிமத்தை பயன்படுத்துவதாக முதல் கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.