மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கேரளத்தில் ராகுல் காந்தி: நலத்திட்டப் பணிகளை தொடக்கிவைக்கிறார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக கேரளம் வந்துள்ளார். 

News image
Updated On :29 செப்டம்பர் 2021, 6:48 am

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக கேரளம் வந்துள்ளார். 

இன்று(புதன்கிழமை) காலை கேரளம் கோழிக்கோடு விமான நிலையம் வந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். 

கோழிக்கோடு மற்றும் மலப்புரம் செல்லவிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்றைய பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

மலாபுரத்தில் ஹிமா டயாலிசிஸ் சென்டர் என்று மருத்துவமனையையும், முதியோர்களுக்கான ஒரு மையத்தை கோழிக்கோட்டிலும் திறந்துவைக்கிறார். இதுதவிர 'எய்மர் பிசினஸ் ஸ்கூல்' என்ற கல்வியகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

நாளை காலை அவர் தில்லி திரும்புவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர்களின் ராஜிநாமாவைத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் கட்சியில் ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்து வரும் நிலையில் ராகுல் காந்தி கேரளம் வந்துள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.