பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

விரைவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதைக் குறிப்பிட்டு செயற்குழுவைக் கூட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்திய நிலையில், விரைவில் கூட்டப்படும் என கட்சி வியாழக்கிழமை அறிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :30 செப்டம்பர் 2021, 4:51 pm

DIN


காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதைக் குறிப்பிட்டு செயற்குழுவைக் கூட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்திய நிலையில், விரைவில் கூட்டப்படும் என கட்சி வியாழக்கிழமை அறிவித்தது.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜிநாமா, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜிநாமா என கட்சியில் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதைக் குறிப்பிட்டு கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் ஆகியோர் உள்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேச செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

தற்போதைய சூழலில் கட்சியில் தலைவரே இல்லை என கபில் சிபல் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் செயற்குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "சிம்லாவுக்குப் புறப்படும் முன், செயற்குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டார்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.