இரு நாள்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது: ஒடிசா அமைச்சர்

ஒடிசாவில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நாபா கிஷோர் தாஸ் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒடிசாவில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நாபா கிஷோர் தாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: 

தற்போது எங்களிடம் 5.34 லட்சம் டோஸ் உள்ளது. தினமும் 2.5 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. அதன்படி இன்னும் இரு நாள்களுக்கு மட்டுமே எங்களிடம் தடுப்பூசி இருக்கும். 

குறைந்தபட்சம் அடுத்த 10 நாள்களுக்குத் தேவையான 10 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து அனுப்ப வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிற்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

தற்போது கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பூசி தட்டுப்பாடு மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இரு தினங்களுக்குள் மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

தற்போது தடுப்பூசி குறைவாக இருப்பதால் ஏற்கெனவே உள்ள 1,400 தடுப்பூசி மையங்களில் 700 மூடப்பட்டுவிட்டதாகவும் என்று கூறிய அவர் இரு தினங்களுக்குள் தடுப்பூசி கிடைக்காவிட்டால் எஞ்சிய 700 மையங்களின் செயல்பாட்டையும் நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com