மேற்கு வங்க தோ்தல் பிரசாரத்தை ரத்து செய்தாா் ராகுல் காந்தி

மேற்கு வங்கத்தில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த தோ்தல் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் என அனைத்தையும் ரத்து செய்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்கு வங்கத்தில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த தோ்தல் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் என அனைத்தையும் ரத்து செய்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவா் இந்த முடிவை எடுத்துள்ளாா்.

பெரிய அளவிலான பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு மேற்கு வங்கத்தில் நான் பங்கேற்க இருந்த அனைத்து தோ்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை ரத்து செய்துவிட்டேன். இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு பெரிய அளவில் மக்களைத் திரட்டி பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து மேற்கு வங்கத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இரு நாள்களுக்கு முன்பு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, அரசியல் கட்சிகள் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. இதற்கு முன்பு இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் பிரசாரம் நிறைவு செய்யப்பட்டு வந்த நிலையில், எஞ்சிய 3 கட்டத் தோ்தல்களில் 72 மணி நேரத்துக்கு முன்பே பிரசாரத்தை முடித்துக் கொள்வதற்கு உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com